நட்பென்றாலே!

நகுலா சிவநாதன்
நட்பென்றாலே!1

நட்பே உறவின் முதல்நாடி
நாடுவதும் அதுவே நிறைநாடி
உப்பாய் நட்பு உயர்ந்திட்டால்
உலகில் ஒற்றுமை நிலைத்திருக்கும்

நட்பின் மலர்வில் அன்பிருக்கும்
நன்றே துளிர்க்கும் உணர்விருக்கும்
இதயம் ஒன்றாய் பயணிக்கும்
இடர்கள் வந்தால் களைந்தும் விடும்

படிக்க பிடிக்கும் நூலாக
பழகப் பிடிக்கும் நல்நட்பு
பண்புடை நட்பே
என்புடை உயிருக்கு
என்றும் ஏற்றம் தருவதாம்

நகுலா சிவநாதன் 1866

Nada Mohan
Author: Nada Mohan

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading