ஊரடங்கு

ராணி சம்பந்தர்
பாரினிலே மெல்ல மெல்லப்
போர் தொடங்கிற்று
பாரிஸிலே நேற்றைய தினம்
பகுதி நேர ஊரடங்கு
ஆரம்பமாயிற்று

அகிலமெங்கும் விலை வாசி ,
வேலையில்லாத் திண்டாட்டம்
ஆயுத விற்பனை அதிகமாயிற்று

வேரினில் விஷத்துளியினிலே
பேரினிலே பயங்கரவாதமும்
ஊரெங்கும் பரவிற்று

பெருவாரி புராதனக் கட்டடம்
வாகனங்கள் , கடைகள் எரிப்பு

நாளிற்கு நாள் எரிபொருள்
விலையேற்றமும் பாடசாலை
பகிஸ்கரிப்பில் மாணவர்
போராட்டம் வலை விரிப்பு

இன்னுமின்னும் எப்படிப்
போகுமோ என்ன ஆகுமோ
என்ற ஏக்கமதில் உத்தரிப்பு

Nada Mohan
Author: Nada Mohan

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading