வேதனையும் சாதனையும்……

இரா.விஜயகௌரி நிதமும் தொடரும் நித்திய பொழுதில் குருத்துகள் வரு நாள் சருகுகளாகும் பயனுறு வேளை பருகிச் சுவைத்து-பின் நொடிந்த...

Continue reading

இலக்கியவானின் நட்சத்திரம்…

ரஜனி அன்ரன் (B.A.) இலக்கியவானின் நட்சத்திரம்... 22.10.2026 ஈழத்து இலக்கிய உலகை இனிய படைப்புக்களால் அலங்கரித்து கவிதைநாடகம்...

Continue reading

இலக்கியவானின் நட்சத்திரம்

ரஜனி அன்ரன் (B.A) இலக்கியவானின் நட்சத்திரம்… 22.10.2026

ஈழத்து இலக்கிய உலகை
இனிய படைப்புக்களால் அலங்கரித்து
கவிதைநாடகம் சிறுகதைகளென தமிழ்மணம்கமழ
இலக்கியவானை வலம்வந்த
இளவாலை அமுதுப்புலவரை
இறையும் அழைத்தானே விரைந்து
இருபத்தி மூன்றாம் நாள் ஐப்பசித் திங்களிலே !

தமிழ் இலக்கியத்திற்கும் ஆன்மீகத்திற்குமென
ஆக்கிவைத்தாரே அரும்பெரும் நூல்களை
பரந்து விரிந்தது படைப்புக்கள்
விருந்து படைத்தது இலக்கிய உலகிற்கு
சிலுவையின் நிழலில் தொடுத்த பாமாலைகள்
தேவாலய மணிகளாய் ஒலிக்கிறதே இன்றும் !

வத்திக்கான்வரை எதிரொலித்தது அவர்புகழ்
திருத்தந்தையின் கரம்தொட்டு
சூடிக்கொண்டார் பாவேந்தர் கிரீடத்தை
பிரான்ஸ்சின் செவாலியர் விருதும்
பல்கலைக்கழக கலாநிதிப் பட்டமும்
அமுதுப்புலவருக்கு மகுடமாச்சுதே !

https://www.youtube.com/watch?v=rQgeKI2Jy-U

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading