அதிகரிக்கும் வெப்பம்

நகுலா சிவநாதன் அதிகரிக்கும் வெப்பம் கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு வாடை குறையும் வசந்தப்பொழுதாய் வேளைதோறும் வெப்ப விடியல் வேண்டும்...

Continue reading

pon.tharma

கவிதை இலக்கம் -533
புழுதி வாரி எழும் மண்வாசம் .

சோழகக் காற்றது சுற்றி அடிக்க .
சுமை கொண்ட கிளைகளும் சுழன்றுமே முறிய .
கூடிய கூட்டமோ கூழுண்டு மகிழ .
தேடியே அண்டாவைத் தேர்ந்துமே எடுக்க.

ஆச்சியும் மகளும் ;அடுக்களை உபயம்.
அண்டாவை நிரப்ப ,ஆறு உமல் ,அசைவம் .
துடிக்கிற நண்டுகளைச் ,சுழற்றி ,ஒரு அடிப்பு .
தொங்கிடும் தலைகளை ,நறுக்கி ஒரு வெட்டு .

அவிகின்ற கூழ் ,அது ,அக்கம் ,பக்கம் எல்லாம் ,கம கமப்பு.
அடுத்தவர் வாசலுக்கும் ,அது சென்று ,வரவழைப்பு .
குடிக்கின்ற கும்பலும் ,கூடி நின்று ,பரபரப்பு .
கோலிய ,பலாவிலையால் ,கூழுமோ ,அள்ளிக் குடிப்பு.

அடித்திடும் காற்று ,அதனால் ,அங்கமெல்லாம் ,புழுதி ஒட்டிப்,பிசுபிசுப்பு .
குடித்திடும் கூழ் சுவையை ,மறைத்திடும் ,புழுதி வாரி எழும் மண் வாசம் .
பொன்.தர்மா

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading