புனித ரமலானே

புனித ரமலானே வஜிதா முஹம்மட் மறையை வழங்கிய மாதம்நீ மனிதம் சிறக்கும் ஈகையின் மாதம்நீ அ௫ளைப் பொழியும் மாதம்நீ அகிலமாழும் இறை...

Continue reading

Selvi Nithianandan

மீட்டுப்பார்க முட்டாள் தினம் (508)
உலகப் பரப்பிலே கடைப்பிடிக்கும் நாளாம்
உவகையாய் நகைச்சுவையாய் ஏமாற்றும் தினமாம்
ஜரோப்பாவில் பலநாட்டிலும் கொண்டாட்டம்
ஜக்கியமாய் பாதித்து கேலியாக்கும்

பள்ளிக்கு சென்று துள்ளிய காலம்
பருத்திச் சட்டை கலராகும் நேரம்
வண்ணமாய் தெளித்திடும் சாயம்
வனப்பாய் சொல்வோம் மாயம்

றோட்டுக்கு சென்றாலே அமைதியை நாடும்
வீட்டுக்கு வந்தாலே றொபின்புளு தேடும்
அடிமட்ட தடியோ வரவேற்பு சூடும்
அழுதாலே அசராமல் முகமே வாடும்

பிரான்ஸ்சிலே ஆரம்ப தோற்றம்
பிரபஞ்சத்தில் வந்ததே மாற்றம்
பிரபலமாய் இருந்ததே ஏற்றம்
பிலிப்மன்னனை முட்டாளாக்கியதுமே.

Nada Mohan
Author: Nada Mohan