Selvi Nithianandan

சோகமா அல்ல சோதனையா

தாயகத்துக்கு விடுமுறை சென்று
தாயுடன் நான்குமாதம் நின்று
முடிந்தவரை உதவி புரிந்து
தவிப்புடன் இங்கு வந்தாரே

சடுதியாய் வந்த சுகயீனம்
சற்று பொறுமைஇழந்த சோகம்
அவசரமான எமது பயணம்
அவலமாய் தடைப்பட்ட நிலைமை

முதுமையில் தனிமை தாக்க
முரண்படும் வார்த்தையால் அகமும்நோக
இளமைக் காலத்தை எண்ணி வருந்த
முடங்கிடுவேனோ மனப்பயமும் அதிகரிக்க

செய்வதறியாது மகவும் வருந்த
செத்துவிடுனோ அன்னையும் புலம்ப
செய்நன்றி மறவா உறவுகளும் உதவிட
நற் செய்தியாய் கிடைக்கட்டும் வாழ்விலே

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading