அன்னைக்கு நிகருண்டோ அவனியிலே

அன்னைக்கு நிகருண்டோ அவனியிலே

ஜயிரண்டு திங்கள் ஆனந்தமாய் சுமந்து

அயராது எமக்கு அமுதமுலை கொடுத்து

அன்பினாலே அகம்மலர அணைத்து ஆரத்தழுவி

இப்புவியில் எம்மை இனிதாய் வளர்த்ததாயே

அன்னைக்கு நிகரும் வேறுண்டோ பாரில்
நல்லவை சேரவும் நல்லறிவு தந்ததும்
சொற்சுவை காட்டியும் சுதந்திரமாக நிற்க்கவைத்தது

கற்கையை உணர்த்தியும் காலத்தில் நற்பணியுணர்த்தியும்

பொற்புடன் நடக்க வைத்த தெய்வமன்றோ

கோமாதா எங்கள் குலமாதாவை மறக்கலாமா

கருணையின் பிறப்பும் தாய்மையின் சிறப்பும்

தாலாட்டும் நிலையில் பாராட்ட வைத்தவள்
அன்னைக்கு நிகருண்டோ

அகலத்தில் வேறு தெய்வமும் உண்டோ

அவனியிலே அழகுடன்
அருட்கொடை ஆக்கியவள்

அலைமேவும் கலைமகளாய் அலைமகளாய் மலைமகளாக்கி

துயர்போக்கிய தாயவளின் செயல் திறனை

விலைகூறி விற்கலாமா
அவளிற்கு நிகருண்டோ

சர்வேஸ்வரி சிவருபன்

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றங்கள் பலவும் நன்று மாறுவதும் சிலதும் வென்று மாற்றாமல் முடியாதும் அன்று மாற்றி நடைபயிலும் இன்று துருவ மாற்றமாய் குளிரும் பருவ மாற்றமாய் வெயிலும் உருவ...

Continue reading