அப்பா

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவிதை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-28
16-05-2024

அப்பா (6 வது வருடம்)

ஆண்டு ஆறு ஓடி மறைந்தாலும்
நீண்ட ஆறாத் துயரம்
மீண்டு வராதோ உங்கள் பாசம்
வேண்டி ஏங்கி நிற்கின்றோம்.

பாசம் பொழிந்த கைகளும்
நேசம் கொண்ட வார்த்தைகளும்
நெஞ்சம் நிறைந்த நேர்மையும்
வஞ்சமில்லா ஈரநெஞ்சமும்

தருணமறிந்து தர்க்கம் விலக்கி
அருளும் அறிவும் எழுந்த ஆளுமையும் அன்னைக்கு நிகரான அன்பின் பெருமை…! மனதிற்குள் இன்னும் வலிக்குதப்பா.

அத்தனை உறவுகள் அருகிருந்தும்
பித்தன் போல் காலனவன்
காவிச் சென்றது கண்ணுக்குள்
இன்னும் நிற்குதப்பா…..

மீண்டுமொரு பிறப்புண்டேல்
வேண்டும் எம் தந்தையாய்
நாண்டி நிற்கின்றோம்.
ஓம் சாந்தி, ஓம் சாந்தி, ஓம் சாந்தி!

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றங்கள் பலவும் நன்று மாறுவதும் சிலதும் வென்று மாற்றாமல் முடியாதும் அன்று மாற்றி நடைபயிலும் இன்று துருவ மாற்றமாய் குளிரும் பருவ மாற்றமாய் வெயிலும் உருவ...

Continue reading