கொழுத்தும் வெம்மை

வியாழன் கவி -2357 “கொழுத்தும் வெம்மை” ஐரோப்பா எங்கிலும் அதீத வெப்பத்தின் மிரட்சி அந்தோ பரிதாபம் புழுவாய்த் துடிக்கும் மனிதம் அப்பப்போ...

Continue reading

இராசையா கௌரிபாலா

ஒற்றுமை

ஒற்றைக் காகிதத்தின் ஒற்றை வரியில்
பெற்றுவிட முடியுமா பொறுமையின் உருவமே
விற்பனைப் பொருளல்ல வேண்டுமென நினைக்க
தற்பெருமை அழித்திட
ஒற்றுமை கூடுமே

கற்பனையில் மிதக்கும் கலகத்தை விலக்கி
சிற்பமாய் வடிவமைக்க
சிந்தையின் உதயமே
அற்பன் பவிசில் ஆர்ப்பரிக்கும்
கடலே
நற்பலன்பல கிடைக்கும்
நானிலத்தின் ஒற்றுமையே

சுற்றம் தேவை சுவையும் அதுவே
கற்றவர் கைபிடித்து கல்லாமை நீக்கிட
மற்றவரும் நல்வளம்பெற மானுடம் போற்றுமே
குற்றம்காணாக் குவலயம்
கேட்போம் ஒற்றுமையாய்.

இராசையா கௌரிபாலா

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading