எதிர்கால ஏக்கம்

ராணி சம்பந்தர்

புதிர் போடும் வேதனைத் தாக்கம்
எதிர்காலப் பெரியதோர் ஏக்கமே
வேலை வேலை என உண்ணாது
உறங்காது குதித்தோடும் வேகம்

இதுவே தமையே மறக்க வைக்கும்
சுமையான அத்திவாரத் தூக்கமே
அதுவோ மூச்சிழந்து உயிர் நீத்த
வயிறு எரியும் பரிதாப சோகமே

பெற்ற பிள்ளையை நினையாத
அளவிற்கு அதிகரிக்கும் மன –
அழுத்த அவசர அவசர ஓட்டம்

இப்படி எல்லாம் விதி துரத்தித்
துரத்தி விளையாடுமென யார்
எதிர்பார்த்தது ?

இன்னுமின்னும் வரப்போகும்
எதிர்கால சந்ததிக்கு எப்படி
சதி துரத்தி விரக்தி வேலி
போடுமோ ?

Nada Mohan
Author: Nada Mohan

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading