21
May
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம் கவிதை 801
முடியாது என எண்ணினால் முயற்சியின் கதவுகள் அத்தனையும் மூடிவிடும்
நதியென...
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம்
முனைப்புடன் கால்களை நகர்த்திடின் அவை தடைகளை தாண்டும்
தளராத மனத்துடன் தொடர்ந்தால்தான்...
இரா.விஜயகௌரி
நிலையற்ற யாக்கை…….
பூமிப்பந்தொரு. வாழ்க்கை
புதிதென தினமும் மாற்றம்
அறியாப். பெருந்நொடி
தெரியா முகங்களாய். திருப்பம்
புரியா மனிதர்களாய் நாம்
நிலையென. எண்ணி நிதம்
நிலையா உலகினில். ஓட்டம்
கலையும். கனவாய். தொடரிது
சேர்த்துச் சேர்த்து சேமிப்பில் இட்டு
உண்பதும் இன்றி உடுப்பதும் இன்றி
நாளைப்பொழுதினைக் கணக்கினிலிட்டு
மூட்டை கட்டிடும் முட்டாள்கள் நாம்
மூச்சை இழுக்க முனைய மறுத்தால்
இதயக்கதவு இயல்பினை மறக்கும்
காற்றின் பெருநொடி. கலங்கி நின்றிடின்
கனக்கும் பெருவெளி நிலையை இழக்கும்
அட்டா வாழ்வு இதுவென உணரின்
எதற்கென ஓட்டம் இயல்பை மறந்து
பொருள்பட எழுதி புரிந்து வாழ்ந்து
நொடிகளை எல்லாம் வாழ்வாய்ச் சமைப்போம்
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...