உயிர்நேயம்..

உயிர்நேயம்……
மனிதத்தின் அகம் ஆளும் ஆற்றல்
மதிப்போடு உயிர் போற்றும் விடியல்
எம்போல பிறர் வாழ எண்ணல்
உயிர்நேயப் பண்பாகும் உலகில்

ஆதவனின் ஒளி போல பரந்து
ஆளுமே உயிர்நேயம் விரிந்து
வாழ்வின் ஆதரமின்றி வாடுவோர் வரட்சியைப் பாரு

வாழ்வோமே நாமும்
வழித்துணையாகி
வாடுகின்ற பயிருக்கு
வார்க்கும் முகில் போல ஆகி!
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan