கனவுப் பயணம்

சக்தி சிறினிசங்கர் விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம் வழிநெடுக வயல்வெளிகள் வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து கண்களைக்...

Continue reading

கனவுப்பயணம்……

ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026 கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து எண்ணங்களின்...

Continue reading

எல்லாளன்

அன்றொரு நாள் அதிகாலை வரையும் வேலை
அயர்ந். துகங்கி திடுக்குற்று
எழுந்த வேளை
என்றனது பல்பிடுங்க பதிந்த நேரம்
இன்னும் சில நிபிடத்தில் என்று நானும்
அந்தரமாய் தயாராகி பல் டாக்குத்தர்
அமைவிடத்தை சேர பெயர் அழைக்க கேட்டேன்
வந்தமரும் வாய்திறவும் என்று அன்பாய்
வலி தந்த கடைவாய் பல் பிடுங்கி விட்டார்.

**
வீட்டுக்கு திரும்பி உடன் குளிக்கப் போனேன்
வியர்படைந்தேன் என் தோற்றம்
பார்த்து நானே
போட்டபடி பற்பசையும் பிறஸ்சின் மேலே
புறப்படு முன் பல் துலக்க மறந்த தாலே
ஈட்டி முனை போல் நரைகள் நாடி ஓரம்
இவற்றோடு வாய் நாற்றம் சகித்தவாறே
ஆட்டி மிக ஆறுதலாய் பல்லை பெயர்த்த
அவர் பண்பை வியர்ந்தேன் கண் நீரை தேக்க.

தலை முழுகி மயிர் வெட்ட போவோமானால்
சலூன் காரன் பணி செய்வான் தானே
சீராய்
பலர் சூழும் பஸ் ரயிலின் பயண வேளை
பண்பாடு உடல் சுத்தம் பேணல் தேவை
அவை தோறும் உணவுக்கு வரிசை சீரை
அரங்குகளில் சத்தங்கள் எழுப்பா சீரை
இவை போன்ற பொது ஒழுக்கம் பேண லாமே
இவன் நல்லோன் எனும் பேரை பெறலாம்தானே!

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading