07
Aug
07
Aug
அதுவொரு கனாக்காலம்
ஜெயம் தங்கராஜா
அது இறக்கைகள் இல்லாது சிறக்கடித்தகாலம்
இனிமையை அள்ளிப்பருகி துள்ளித்திரிந்த கோலம்
வசந்தம்...
07
Aug
அது ஒரு கனாக்காலம்
நகுலா சிவநாதன்
அது ஒரு களாக்காலம்
நிலாக்கால மேகங்கள் நீந்துகின்ற விண்மீன்கள்
கனாக்கால கோலங்களாய்க் காலச்சுவட்டில்
பதிந்த அந்தக்...
ஒளவை
நட்பு
———
உள்ளத்தை ஒழிக்காது
உண்மை உரைக்கவும்
பள்ளிக் காலத்தில்
பலதைப் பகிரவும்
கள்ளம் செய்தாலும்
காவலாய் நிற்கவும்
வெள்ளை மனதாய்
வேண்டும் நட்பு
உதிரத்தில் வேறாயினும்
உடன்வரும் சொந்தம்
பதிலேதும் கேட்காமல்
பாசத்தைக் காட்டிடும்
எதிலுமே துணையாய்
என்றென்றும் தொடரும்
நதிமூலம் ரிசிமூலம்
நட்புக்கும் இல்லை
கர்வத்தை உருவமாய்க்
கொண்ட துரியனும்
கர்ணனின் நட்பில்
கண்ணியம் காத்தான்
கண்ணனின் நட்போ
குசேலனின் தகுதியை
எண்ணத்தில் என்றும்
ஏற்றியே வைத்தது
சாதி மதங்கள்
சங்கடம் தரினும்
வீதிக்கு வீதி
வேற்றுமை இருப்பினும்
நாதி அற்றவனுக்கும்
நல்நட்புக் கிடைத்திடின்
சாதித்துக் காட்டிச்
சான்றாய் நிற்பான்.
ஔவை.
Author: Nada Mohan
03
Aug
சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம்_ 196
"அவதி"
பள்ளி மாணவர்3
நேரத்தை கடைபிடிக்காது கடைசி நேரத்தில்
ஓடி...
02
Aug
ராணி சம்பந்தர்
அவதி அவதி அவதி எனும்
அவசரம் அவசரமாய்க்
கடுகதி ஏறிடத் துதி பாடும்
மானிடர் படும்பாடு...
02
Aug
ஜெயம் தங்கராஜா
உடல் ரீதியாக ஒரு அவதி
கடவுள் விட்டதந்த வாழ்வின்...