புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

ஒளவை

பரவசம்
=======
மயங்கும் மாலை மனதை வருட
பயங்கள் மறந்த பதமான பொழுது
இயற்கை அழகில் இதயம் மிதக்க
சயனம் தாலாட்ட சந்தோச பரவசம்

முழுநிலா வானில் மெய்மறந்த வேளை
பழுதில்லா நிலவைப் பார்த்து இரசிக்கையில்
தொழுகின்ற கடவுளாய்த் தோன்றும் உருவுடன்
அழுவதும் சிரிப்பதும் ஆனந்த பரவசம்

தென்றல் காற்று தேகம் தீண்ட
இன்ப ஊற்று இதமாய்த் தூண்ட
அன்பு உள்ளம் அருகில் இருக்க
தன்னை மறந்து தங்கும் பரவசம்

அலைகள் கரையை அடித்துச் செல்ல
நிலைத்த கால்கள் நீரினில் புதைய
கனத்த சுமைகள் கரைந்து போக
மனது மகிழ்ந்து மிதக்கும் பரவசம்

அருவியின் ஓசையும் அழகிய வீழ்ச்சியும்
குருவிகள் இன்பமாய்க் குலவிடும் காட்சியும்
உருகிய உள்ளத்தில் உறைகின்ற வேளையில்
தருகின்ற பரவசம் தன்னிலை மறக்குமே.

ஒளவை.

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading