என் பிறந்தநாள்
வரமானதோ வயோதிபம்
கண்டுபிடியுங்கள்
கவி 726
நிம்மதி கெடுக்கும் ஜென்மங்கள்
விரும்பி யாரும் அழைப்பதுமில்லை
அழையா விருந்தாளியாக உள்நுழைவார்
வந்தவர் போவாரென்றால் போகமாட்டார்
போனவர் வராரென்றால் பிறகும் வருவார்
யாவரும் வெறுக்கும் படைப்பு
கரைச்சல் தருகின்ற ஜென்மம்
பலருக்கு சிறுசிறு தொல்லைகள்
சிலருக்கு எல்லைகளில்லாத் தொல்லைகள்
நிம்மதியை குலைக்க என வரிந்துகட்டி
தனக்காக பிறர் நேரத்தை செலவழிக்கவைத்து
பணத்தைப் பறித்துக்கொண்டே வெளியேறும் பிறப்பு
இந்த அதிதியை அனுப்பிவைத்தாலே மகிழ்ச்சி
யார்தான் எவரென்று யோசிக்கின்றீர்களா
உங்களுக்கும் தெரியும் நன்றாக நம்புவீர்களா
எமபாதக செயல்களை கூடவிருந்து செய்யும்
அடுக்கடுக்கான துரோகங்களை எப்படித்தான் சொல்வது
எதிர்க்கக்கூடிய வலுமட்டும் இருந்திருந்தால்
பகைவர்களை ஓடவோட விரட்டிடலாம்
சக்தியில்லா தன்மையதால் அடிமையாக கைகட்டி
பயப்படுத்தும் இந்த பங்காளி பகையாளி
சுகத்தை சுமையாக்கிவிடும் நிகழ்ச்சி
இன்பத்தை குலைத்துவிடும் சம்பவம்
தீவிரவாதியாக பயங்கரவாதியாக உள்நுழைந்து அட்டகாசம்
ஒழித்துக்கட்ட பலவித ஆயுதங்களை எடுத்திடினும்
சாகாவரம்பெற்ற மார்க்கண்டேயனாய் இருந்துதரும் தொல்லைகளே
யாருக்கும் இந்தப்படைப்பு நன்மைசெய்ததாக சரித்திரமில்லை
ஊருலகம் வெறுத்தொதுக்கும் கேவலங்கெட்ட கூட்டமிது
பெரியவர்களென்றும் சிறியவர்களென்றும் தாக்குகின்ற காட்டுமிராண்டிகள்
இரக்கமற்ற அரக்க குணங்கொண்ட பூவுலகவாசிகள்
ஜெயம்
22-05-2024
