வரமானதோ வயோதிபம் 53
” வரமானதோ வயோதிபம் “
கலாதேவிபத்மநாதன்.
சந்தம் சிந்தும் சந்திப்பு கவிதை தலைப்பு அம்மா
அம்மா அம்மா என்றே அனுதினமும் அருகில் நின்றே
சும்மா சும்மா கட்டி சுகமாய் முத்தம் தந்தே நிம்மதி உந்தன் மடியில் நித்தம் தலையை சாய்க்க
சம்மதம் தந்ததாலே நான்
சரித்திர மனிதன் ஆனேன்
எம்மை ஏற்றி வைத்த
ஏணிப் படியும் நீயே உம்மை இன்றி எனக்கு வேறுலகம் உண்டோ கூறு
நம்பி வைத்தேன் உன்னில்
நலமுடன் நூறு வாழ தும்பிக்கை பலமும் கொண்டவர்
துணிவும் வீரமும் நிறைந்தவர்
அம்மா துன்பமென்ன நேர்ந்ததோ
துணை இன்றி தனியே ஊர்வலம்
அம்பிகை போன்று வாழ்ந்த
அன்புதெய்வம் ஆறுதல் கண்டீரோ😭😭😭
நன்றி வணக்கம்
சந்தம் சிந்தும் சந்திப்பிற்காக கலாதேவி பத்மநாதன் ஈழத்தமிழர் வளாகம் இந்தியா
மதிப்பு குறிய சகோதரர் பாவை அண்ணா அவர்களுக்குவணக்கம் நீண்ட இடைவெளியினை விட்டு மீண்டும் தொடரும் தங்கள் ரசிகையாகிய நான் தங்களது அயராத உழைப்பினை கண்டு வியந்ததுண்டு எறும்பாய் உழைக்கும் தங்கள் முன் ஒரு சிறு துரும்பாய் இருக்க விரும்புகின்றேன்
நன்றி பாவைஅண்ணா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
