கணப்பொழுதில்
கணப்பொழுதில்
கலாதேவி பத்மநாதன்
சந்தம் சிந்தும் சந்திப்பு கவிதை தலைப்பு
மழை நீர்
அமிர்த மழையே அனைத்தும் நீயே இமிழ்தினும் இல்லையேல் இவ்வுலகம் இல்லையே
உணவை உன்னருளால் உருவாக்கிக் கொடுத்தாயே உண்ணும் உணவாக உன்னையே தந்தாயே
மழை நீர் மண்ணில் மலராது போய்விடின் உழைப்பின்றி உலகம் உணவுபஞ்சம் காணுமே
செல்வத்துள் செல்வம் செழித்திடும் மழையே வல்லது வான்துளி வாழ்ந்திட வைக்குமே
மண்ணின் பசும்புல் மழைத்துளி வரமே எண்ணிய வாழ்விற்கு ஏற்றம் தந்திடுமே
கடல் வளத்தை
காக்கும் கருமேக கூட்டமே
உடல் பொருள்
ஆவிஎல்லாம் உன்னாலே இயக்கமே
காலம் தவறினும்
காணமழை இல்லையேல்
ஆலய பூசையும்
ஆன்மீக வழிபாடுமே
மழைநீர் இல்லையேல் மண்ணில் உயிரில்லை
உழைக்கவும்
வழியின்றி
ஒழுக்க வாழ்வில்லையே
நன்றி வணக்கம்
சந்தம் சிந்தும் சந்திப்பிற்காக கலாதேவி பத்மநாதன் ஈழத்தமிழர் வளாகம் இந்தியா
சகோதரர் பாவை அண்ணா அவர்களின் அறிய பணிக்கான மனம் நிறைந்த வாழ்த்துக்கள்
