நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

ஆரோக்கிய வலுவும் ஆசனங்களும்

கவிதை 805
உடலை வளைத்தாலே வலிமை பெறும்
உள்ளமும் வளர்ந்து தெளிவு பெறும்
ஆசனம் ஒவ்வொன்றும் ஓர் அரிய கலை
யோகாசனம் ஆரோக்கியத்தின் உச்ச நிலை

அவசர உலகில் இயந்திரகதியில் வேகம்
அவசியம் நிம்மதி அதைத்தருவது யோகம்
கவலைகள் தீர்க்கும் அருமருந்தும் இதுவே
நோய்களற்ற நலவாழ்வை தருவதும் அதுவே

உடலையும் உள்ளத்தையும் இணைத்திடும் பாலம்
உயிரும் உறுதிகொள்ள ஆயுளும் நீளும்
மூச்சையே இசைத்து மனதை வெல்லலாம்
யோகப் பயிற்சியால் வாழ்வை வெல்லலாம்

ஜெயம்
18-06-2026

Nada Mohan
Author: Nada Mohan