கீத்தா பரமானந்தன்

அலைபாயுதே!

ஆசைக் கடலில்
அனுதினப் பயணம்
அடங்க மறுக்கும்
ஆணவ அலைகள்
ஓசையற்றுச் சிரிக்குது
ஓயாத விதியும்
ஓடுது வாழ்வு
ஓடமாய் நாளும்!

கடைவிரித்துக் காத்திருக்கும்
கற்பனைக் கோலங்கள்
மடையாகக் கனவுகள்
மனந்தன்னைக் களிப்பாக்க
மாறுகின்ற நொடிகளுமோ
மறுதலித்து விளையாடும்
உடையாது காத்திடவே
உள்ளமனத்தின் போராட்டம்!

இருக்கின்ற இன்பத்தை
இணைத்துச் சுக்கித்திடாது
தருக்கத்தில் இழுபறியாய்
தடம்புரட்டும் ஏக்கங்கள்
வருகின்ற பொழுதெல்லாம்
வாஞ்சையை நிறைத்தாலும்
ஒருபோதும் அடங்காது
உள்ளமும் அலைபாயுதே!

கீத்தா பரமானந்தன்
27-02-2021

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

    Continue reading