அறிவின் விருட்சமே..

வசந்தா ஜெகதீசன்... அறிவின் விருட்சமே... அறிவூட்டும் வித்தகமே அனுதினமும் புத்தகமே வரலாற்றுப் பொக்கிசமே வார்ப்பாகும் நூல்த்தேட்டம் சரிதத்தின் சான்றுரைக்கும் சமகால படைப்பாகும் எண்ணத்தின் சிந்தைகளை ஏற்றமுற...

Continue reading

அறிவின் விருட்சம்

ராணி சம்பந்தர் விதையின் விருட்சம் என்றும் வாழ்வின் வெளிச்சம் இன்றும் பாதையின் உச்சம் புத்தகமே பூத்ததே மனதிலோ இனிமை சேர்த்ததே...

Continue reading

குரு பெயர்ச்சி

அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவிதை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-23

18-04-2024

குரு பெயர்ச்சி

குரோதி பிறந்திட குருபெயர்ச்சியாம்
விரோதி அகன்றிங்கு மனமகிழ்ச்சியாம்
குன்றக் குமரனைக் கும்பிட
குலமெலாம் தழைத்தோங்குமாம்!

கோயில் வாசலில் பல காலமாய்
பலனேதும் அற்று புலம்பும் நீ
நலனேதும் கிடைக்க புரட்டிப் பார்
சந்நிதியைக் கொஞ்சம் மாற்றிப் பார்!

கேட்பதையே கேட்க கேட்பவன் செவிப்பறையும் இசைவாக்கம் காண
நோக்கம் நிறைவேற நுண்ணறிவு கொள்
தேக்கம் அற்று நீ வாழ!

தொழுதலுடன் விழிதலும் செய்
தொழிலையும் தேடி ஆகாரம் கொள்
கூடிக் கதை பேசி குலவி வா
குன்றக் குமரனே கூப்பிட்டுத் தருவார்!

இறையருளால் குருவும் பெயர
ஆயுளும் கெட்டி நோய்களும் அற்று
புத்திர சம்பத்து, வாகனம், மனையென
குருபெயர்ச்சியும் குதுகலமுமே!

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Nada Mohan
Author: Nada Mohan