கெங்கா ஸ்ரான்லி

மனித அவலங்கள்

மனிதம் தேடும் நாளில்
மனிதக் கொலையே நடக்கிறது.
மானிடம் நொந்து வேகுகின்றது
மனிதனே என்ன செய்கின்றாய்.

புகழுக்காக உயிர்களை
புளுவாக நசுக்கலாமோ.
உயிர்களின் மேன்மை
இவ்வளவு தானோ உணர்வாய்.

அனலிடைப்பட்ட மக்கள் மனம்
கூட்டம் கூட்டமாக வெளியேற்றம்.
எங்கு போவது என்ன செய்வது
சங்கடம் நிறை வாழ்வின் எல்லை.

பாலகர் பாலுக் கழ
முதியோர் மூட்டை மூடிச்சுடன்
கதி கலங்கி நிற்கும் நிலை
கண்டவர் கவலையில் ஆழ்ந்தனர்.

அன்று நாம் பட்ட அவலம்
இன்று உக்ரைன் அனுபவிக்கிறது
மனித அவலங்கள் மறைவது எப்போது
மக்கள் நிம்மதி வாழ்வு வாழுவது எப்போது.

கெங்கா ஸ்ரான்லி.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றங்கள் பலவும் நன்று மாறுவதும் சிலதும் வென்று மாற்றாமல் முடியாதும் அன்று மாற்றி நடைபயிலும் இன்று துருவ மாற்றமாய் குளிரும் பருவ மாற்றமாய் வெயிலும் உருவ...

    Continue reading