தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

சக்தி சக்திதாசன்

அம்மா என்றொரு தெய்வம்
அன்பின் அடிப்படைத் தத்துவம்
அகரமாய் வாழ்வின் ஆரம்பம்
ஆண்டவன் என்பதே தாயுள்ளம்

விளக்கின் ஒளியாய் ஒளிர்ந்திடும்
விந்தையை அறிந்தவள் அன்னையே
வியப்பின் வடிவாய் மலர்ந்தவள்
வித்தகப் பெண்ணாய் அன்னையரே !

கண்ணில் ஒருதுளி நீரென்றால்
கசியும் உதிரம் அவள்நெஞ்சில்
தனக்கென எதையும் எடுக்காமல்
தன்னை குழந்தைக்காய் ஈந்திடுவாள்

தாய்மை என்பது ஓர்வரமே !
தாயினம் உலகில் தனியினமே !
பெண்ணாய்ப் பிறந்த அனைவருமே
பூமியில் தாய்மனம் கொண்டவர்களே !

அன்னையர் தினத்தில் மட்டுமல்ல
அனைத்துத் தினமும் தாய்மையினை
போற்றிடும் வகையில் வாழ்ந்திடலாம்
பெண்களைக் கண்ணாய் மதிப்பதனால்

வாழிய ! வாழிய ! தோழியரே !
வாழிய ! வாழிய ! அன்னையரே !
புதியதோர் சமுதாயம் அமைத்திடவே
புதுமைகள் புரிந்தே வென்றிடுக

சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இசை இசையோடு எல்லாம் இவ்வுலகுஇணைத்திடும் பசைபோல ஒட்டியே பாரினில் சிறந்திடும் அகிலத்தில் எல்லாமே இசையோடு சேர்ந்திடும் அன்றாட ...

    Continue reading