தினம்தினமாய்….

வசந்தா ஜெகதீசன் தினம்தினமாய்---- உழைப்பின் வேரே செழிப்புறும் உருளும் நாளின் காத்திடம் அகிலப்பரிதி விழிப்புறும் ஒற்றுமைச் செதுக்கல் ஒங்கிடும் வற்றாச்சுரங்க வரம்பிலே வலிந்து...

Continue reading

சக்தி சக்திதாசன்

உருளும் உலகம்
உறங்கும் இதயம்
உண்மை உதயம்
உணர்வுகள் புதையும்

நினைவுகள் விரியும்
நிதர்சனம் புரியும்
நீளமாய்த் தெரியும்
நடப்பதை அறியும்

காலத்தின் ஓட்டம்
கனவினில் ஆட்டம்
ஆனந்தத் தோட்டம்
அறிவிலர் கூட்டம்

விதைப்பது யாரோ
வளர்ப்பவர் யாரோ
அறுப்பவர் யாரோ
அறிந்தவர் யாரோ

வாழ்க்கையின் ரகசியம்
விளங்கிடின் அதிசயம்
இகத்தினில் பலரகம்
இறுதியில் ஒரேரகம்

இயம்பிடில் சத்தியம்
இன்பந்தான் நித்தியம்
இதயத்தின் சுத்தமே
இகப்பரம சித்தமே

பிறப்பினில் ஆன்மா
இறப்பிலும் ஆன்மா
இடையினில் காண்பது
இடையறா மாயையே

சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan