புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

சக்தி சக்திதாசன்

பாட்டி சொன்ன கதை
கேட்டு வளர்ந்த மனம்
விட்டுச் சென்ற நினைவு
மீட்டுகின்ற கானம் இது

பாட்டி என்றொரு உருவம்
பார்த்தது அன்றைய பொழுது
போர்த்த சுகந்த உணர்வுகள்
பொங்கும் இந்த வேளையில்

எந்தையும் தாயும் கொண்ட
முந்தைய உறவின் எச்சங்கள்
சிந்தையில் விதைத்த பந்தத்தில்
சிறப்புடை உறவாய் பாட்டியே !

அப்பாவின் அன்னை பாட்டியாய்
அன்றென் வாழ்வினில் கண்டதும்
அவளுடை அன்பின் எல்லைகள்
அளவிளா வகையினில் விரிந்ததே !

அவ்வை என்பதுமொரு பாட்டியே
அன்னைத் தமிழின் தொன்மையில்
ஆண்டாள் என்பதுமெம் பாட்டியே
ஆண்டாள் தமிழை அக்கோதையே !

ஆடையாய் அன்னை தந்தையும்
அணிகலனாய் பாட்டி அழகூட்டுவாள்
அறிவுரை ஆயிரமாய் உரைத்திடுவாள்
அன்புடன் பட்டியெமக்கு கதைகளாய்

பாட்டியின் வைத்தியம் இன்றுமே
பாரினில் வியப்புடன் செயலிலே
பாக்குடன் வெற்றிலை சேர்த்தே
பவித்திரமாய் பாட்டி மென்றிடுவாள்

பாண்டி என்றொரு விளையாட்டு
பாட்டிக்கே வெற்றி என்றுமதில்
பாதுகாப்பாய் அவளின் நினைவுகள்
பெட்டகம்போல் நெஞ்சில் நிறைந்திருக்கே !

சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading