Jeya Nadesan May Thienam-222
மே தினமே மேதினியில் (712)
சக்தி சக்திதாசன்
சந்தம் சிந்தும் சந்திப்பு 238
“மீண்டெழு”
வீழ்ந்து விடாதே !
காலம் சற்றே கடினமாய்
காற்று சற்றே வேகமாய்
சேற்று நிலங்களே பாதையாய்
கண்டிட்டாலும் தளர்ந்து நீயும்
வீழ்ந்திடாதே !
தாழ்ந்து விடாதே !
வெட்டி பேசும் வீணர்களும்
தட்டி வீழ்த்தும் நீசர்களும்
முட்டிப் பார்க்கும் மூர்க்கர்களும்
முன்னால் வந்து நின்ற போதிலும்
தாழ்ந்திடாதே !
தளர்ந்து விடாதே !
முயற்சி செய்து தோற்றாலும்
உழைத்தும் வாழ்வில் உயராமலும்
விரைந்தும் ஊர் போய்ச் சேராமலும்
பட்டும் அனுபவம் உதவாவிட்டாலும்
தளர்ந்திடாதே !
மலைத்து விடாதே !
எண்ணாத நேரம் வென்றிட்டாலும்
நினைக்காத ஒருஇவர் உதவிட்டாலும்
நம்பாத செயல்கள் நடந்திட்டாலும்
நாளை உன் வாழ்வு சிறந்திட்டாலும்
மலைத்திடாதே !
திகைத்து விடாதே !
எட்டாத உயரத்தில் மின்னும்
கிட்டாத வாழ்வினை எண்ணி
தட்டாத கதவுகள் திறந்திடினும்
ஈட்டாத வெற்றிகளை எண்ணி
திகைக்காதே !
தொலைத்து விடாதே !
கனிவான உள்ளத்தின் ஈரத்தை
துணிவான தோள்களின் வீரத்தை
பணிவான நெஞ்சத்தின் தன்மையை
பட்ட அனுபவங்களின் ஞானத்தை
தொலைக்காதே !
சக்தி சக்திதாசன்
