தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

சக்தி சத்திதாசன்

காதல்
நெஞ்சுக்குள்ளே எரியும்
சுவாலை எந்த நீரினாலும்
அடங்காத தாகம்
எனக்குள்ளே … எனக்குள்ளே ….
பிறக்கின்ற வேகம் ;
ஏதோ சிறகெடுத்து
பறக்கின்ற ஞானம்…..

பிறந்ததன் பயனறியா
இறந்தபின் முடிவறியா
ஈரம் !ஈரம் !ஈரம் !
நெஞ்சை அழுத்தி நிற்கும்
பாரம் !
மோகச் சுழலுக்குள்
மீள வழியின்று
சிக்கித் தவித்து நின்ற
முட்டாள் பருவமதில்
அறியாதிருந்த அனுபவங்கள்
ஆயிரமாய்க் கற்றுத் தந்தன…

எதைத் தேடினேன் —-பின்னே
அதையா நாடினேன்?
ஏனோ மூடினேன் நெஞ்சக்
கதவைத் திறக்கச்
சாவி ! சாவி !சாவி !

இல்லையெனத் தாவிச்
சரிந்ததொரு
தென்னஞ்சோலையெனும்
காதல் சாலையதில்
நீளமான பயணத்தில்
நின்று விட்ட ஞாபகங்கள் …….

தொலைத்து விட்ட கணங்களை
எனக்குள் நானே
இன்றும் தேடிக் கொண்டே …..

சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இசை இசையோடு எல்லாம் இவ்வுலகுஇணைத்திடும் பசைபோல ஒட்டியே பாரினில் சிறந்திடும் அகிலத்தில் எல்லாமே இசையோடு சேர்ந்திடும் அன்றாட ...

    Continue reading