கவிதையெனக் கிறுக்கினேன்(52)…
புனித ரமலானே
சக்தி சிறினிசங்கர்
உற்சாக வணக்கம்
வியாழன் கவிதை நேரம்
கவித தலைப்பு
தேடும் விழியில் தேங்கிய வலி!
இரண்டு ஆயிரம் நாட்களுக்கு மேலாய்
இருண்டு போன வாழ்வின் துயரம்
முரண்டு பிடித்து மூச்சைக் காத்து
திரண்டு எழுந்த கூட்டம் தெருவிலே நிற்குது
அருளும் இறையும் அமைதி காக்குது
பெருவெளி தன்னால் பேரவலம் தெரியலையா
கருணை காட்ட கட்சிகளும் இல்லையா
தருணம் இதுவென்று தலைமைகள் தலைக்கனம்
விடிவு எப்போ வினாக்கள் தொடருது
முடிவிலா தொடர்கதை முழுநீள காட்சிகள்
தினம்தினம் அழுகுரல் தீர்வுதான் கிடைக்குமா
மனங்களும் பேச மறுக்கிறது
மறைக்கிறதே
உண்மையை உரைக்க உணர்வும் இல்லையா கண்கள் குளமாகும் காட்சியைப் பார்த்து
எண்ணிட வேண்டாமா எதற்காக இப்படி
மண்டியிட்ட மக்களின் மனக்கவலை தீருமா?
ஏங்குமே நெஞ்சம் எந்நாளும் உறவினைத்
தாங்கியே இதயம் தள்ளாடும் வாழ்வில்
வீங்கிடும் ரணங்கள் விமோசனம் கிடைக்குமா?
தேடும் விழிகளில் தேங்கிய வலிதான் குறையுமா?
பாடுபடும் பாமர மக்களின் பாரம்தான் குறையுமா?
நாடும் வீடும் நலமுடன் வாழ நல்லதோர் அரசும் நமக்குக் கிடைக்குமா?
கவிதைநேரத் தொகுப்பாளினிகட்கு மிக்க நன்றி!
திரு.திருமதி நடா மோகன் அவர்களுக்கும் நன்றி கூறி
அன்புடனும் நன்றியுடனும் விடைபெற்றுக்கொள்கிறேன்.
நன்றி வணக்கம்!
