கணப்பொழுதில்

கணப்பொழுதில்.. சிவருபன் சர்வேஸ்வரி கணப்பொழுதில் மாறும் மனிதன் கோடி இமைக்கும் நேரத்துக்குள் இரணியர் பலகோடி முடிக்கும் காரியம் தெரியாதவர்...

Continue reading

சிவா சிவதரஷன்

வாரம் 191

“மழை நீர்”

மழைநீரே! மழை நீரே! விண்ணைத்தாண்டி வருவாயா?
விண்ணில் நீ உள்ளவரை பரிசுத்த தூய்மை காத்தாய்
என்று மண்ணில் விழுந்தாயோ அன்றே மாசடைந்து போனாய்
மண்ணில் உலவும் மாந்தரது குணங்கண்டு மாற்றமடைந்தாயோ?
கற்புடை மகளென உமைக்கருதியமை எங்கள் தவறோ?
நீயின்றி அமையாது உலகு என்பது மூதுரை
அறியாமை காரணமாய் இயற்கையைச் சீண்டுவோரின் பேதமை
பருவமுறைபேணி உயிர்களுக்கெல்லாம் உணவளித்தமை உன் தாய்மையின் பெருமை
பாரில் உன்பார்வை படாத நிலங்களைப்பார்,வரண்டு பாலைவனங்களாகின்றன
அங்கே உன் சீற்றத்தைக்காட்டு,பாலையும் சோலையாகும்
விளைந்து வீடு வரவிருந்த வேளாமை வெள்ளம் கொண்டுசெல்லல் முறையோ?
மனித குலம் தன்தவறை ஒருபோதும் உணராது, தாயவள் நீ மன்னித்து இந்த மக்களை வாழவை!
இயற்கையோடொட்டி இயல்பாய் மனிதன் வாழ்ந்திருந்தால் உலகும் குறையின்றி வாழும்,உன் சீற்றமும் தணிந்திருக்கும்.

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.

Nada Mohan
Author: Nada Mohan