கவிதையெனக் கிறுக்கினேன்(52)…
புனித ரமலானே
சிவா சிவதர்சன்
[ வாரம் 269 ]
“பாமுகமே வாழி”
தாய்மொழியின் தடைதகர்க்க புறப்பட்டசேய்கள்
பெற்றதாயை புறந்தள்ளுவார், தள்ளார்தாய்மொழி அவலம்
புலம்பெயர்ந்து தேசதில் உதித்த தமிழன்னை
தமிழை மறவா தலைநிமிரும் பாமுகமே நீ பல்லாண்டு வாழி!
இனியென்ன தமிழ்! இடருக்குள்தாங்கிப்பிழைக்குமா?
காப்பதென் கடன்என்றே களத்திலிறங்கியதமிழன்பர்
வாடாமல் வானொலியில் தமிழ்பரப்பிய நடாமோகன்
இன்றும் எத்தனை தமிழ் நெஞ்சங்கள் உங்களைவாழ்த்தும் !
பாமுகமே நீ வாழி பணியுடன் பயணிக்கும் உறவுகளே வாழி!
தமிழமுதம்உதிரத்திற்கலந்து உயிராய்போற்றும் தமிழர்
தொன்மை இனிமை முதன்மைத்தமிழை மூழ்கடிக்கவிடுவரா?
சிறுவர் முதல் முதியோரவரை கலந்து மகிழும் பாமுகம்
ஒரு முறை தவறினும் தாங்கொணார் போராடத் துடிப்பர்
பார்த்தால் பசி தீரும் பருகினால் சுவை ஏறும்
தமிழ் வளர்க்கும் பல்சுவை நிகழ்ச்சியாய் பாமுகம்
தமிழ் கூறும் நல்லுலகம் போற்றிப்புகழும் பாமுகமே
இன்று இருபத்தேழாண்டு பூர்த்தியடையும் பாமுகம்
நீ மேலும் வளர்வாய் பாமுகமே நீ நீடூழி வாழி!
நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்
