சிவா சிவதர்சன்

[ வாரம் 294 (254)]
“பங்கு நீ”

தனிமரமாய் வாழ்ந்து வாழ்க்கை யைத்தொலைத்தல் பரிதாபம்
தனிமையில் வாடி இன்பதுன்பங்களைப்பகிர முடியாத அவமானம்
தனிமையிலே இனிமைகாணமுடியாத பெருஞ்சோகம்
தாங்காத சுமையை இறக்கிவைத்து இளைப்பாற ஒரு சுமைதாங்கி அவசியம்

நல்லவேளை நாம் பிழைத்துக்கொண்டது பெரும் புண்ணியம்
இளமையில் கல்விபோல அழகிய காதலியும் வாய்த்தது எனது பாக்கியம்
என் வாழ்வின் பங்கு நீ உன்வாழ்வின் பாதிநான் என ஆனோம்
அழகான மனைவியாய் அன்பான துணையாய் இல்லறத்திலும் இணைந்தோம்

மாரிக்குளிர் நீங்கி வசந்தத்தின் வருகை கூறிநிற்கும் பங்குனி
காலங்களில் அவள் வசந்தம் என் இன்பவாழ்வின் பங்கு நீ
நான் வாழுங்காலம் முழுவதும் வீசுந்தென்றலாய் நீ
உன்னிதயத்தில் சரிபாதி எனக்கே தந்தாய் பங்கு நீ

உருவத்தால் இருவரானாலும் உள்ளத்தால் ஒருவரானோம்
மரணமொன்று வரும்,வந்தாலும் அழியாத காவியம் படைப்போம்

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் நாலும் சேர்க்குமே நல்லுறவு அல்லும் பகலுமே பாடுபடவே கல்லும் கனியாகும் கூட்டுறவு சொல்லும் செயலும் பல்லுறுதி கொல்லும்...

    Continue reading

    ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

    Continue reading