தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

சிவா சிவதர்சன்

சந்திப்பு 226

“ஆறுமோ ஆவல்”

ஆண்டவனே உன்படைப்பின் அதிசயமே மனிதப்பிறவி
அதிலும் ஊறுவைத்தாய் இனத்தில் உயர்வு தாழ்வுகாட்டி
அடிப்படையில் இனமேம்பாடு சுயமுயற்சியின் விருத்தி
ஆனாலும் மேலெழும் போதெல்லாம் தள்ளி வீழ்த்தினாய் இனச்சாயம் பூசி
சிந்தித்தால் ஆறுமோ நெஞ்சம் என்று தான் தீருமோ எம் ஆவல்?

தமிழன் என்றொரு இனமுண்டு! சொல்லொணா ஆற்றல் பலஅதற்குண்டு!
தமிழன் கட்டியாண்ட இராட்சியங்கள் வரலாற்றில் சான்றுகள் பலவுண்டு
தனக்கென நிலமுமின்றி தாழ்ந்துபோன இனமாகி தரங்கெட்டு வாழ்கிறான்
உலகில்இன்று நினைத்தால் ஆறுமோ நெஞ்சம்? என்றுதான் தீருமோ எம்ஆவல்?

நாகரீக உச்சியிலன்று நின்றவன் தமிழ்மொழியைத் தாயாகக்கொண்டவன்
நாடாளும் கலையை உலகம் போற்ற வளர்த்தவன்
எங்கே தொலைத்தான் தன்னாற்றல் அனைத்தையும்?
எண்ணி எண்ணிப்பார்த்தால் ஆறுமோ நெஞ்சம்?
மீண்டுமொரு போரின்றி ஆறாது ஒருபோதும் எம் ஆவல்!

நன்றி வணக்கம்.
சிவா சிவதர்சன்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இசை இசையோடு எல்லாம் இவ்வுலகுஇணைத்திடும் பசைபோல ஒட்டியே பாரினில் சிறந்திடும் அகிலத்தில் எல்லாமே இசையோடு சேர்ந்திடும் அன்றாட ...

    Continue reading