Jeya Nadesan May Thienam-222
மே தினமே மேதினியில் (712)
சிவா சிவதர்சன்
வாரம் 240
“மாவீரரே”
மண்ணைவிட்டு மறைந்தாலும் தமிழர் மனதைவிட்டு மறையா மாவீரரே
விண்ணை எட்டும் தமிழர் வீரம் என்றும் துவண்டு விடாமல் காத்த மாவீரரே
பகைவர் கண்ணில் என்றும் விரலைவிட்டாட்டும் மாவீரரே
உங்கள் வரவைக்கண்டால் எதிரிகள் கூட்டம் தானாகவே பின்வாங்கும்
களத்தில் பொருதி வெற்றிபெறல் வீரர்க்கு அழகாகும்
கபடவலைபின்னி மௌனிக்கச்செய்ததல் பேடிகளின் சூழ்ச்சித்திறனாகும்
கூடஇருந்தே குழிபறித்தல் துரோகச்செயலாகும்
நம்பினார் கெடுவதில்லை,நயவஞ்சகத்தால் பெற்ற வெற்றி நிலைப்பதில்லை
அலையெழுப்பும் சமுத்திரமும் சிலநாள் அமைதிகாக்கலாம்
குமுறும் எரிமலையும் தணிந்ததுபோல் தோற்றம் காட்டலாம்
அடிமனதில் தோன்றிய சுதந்திரக்கனல் விடியல்வரை ஆறாது
நம்பிக்கை உறுதியும் விடுதலை வேட்கையும் தோற்றதாய் வரலாறு இல்லை
வாழ்க மாவீரர் சுதந்திரத்தாகம்
மலரும் ஒருநாள் தமிழீழத்தாயகம்.
நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.
