ஆளுகின்றான் அடிபணிகின்றோம்..!!

வியாழன்கவி 2300!! ஆளுகின்றான் அடிபணிகிறோம்!! வாழுகின்ற வாழ்க்கையிலே வழி நெடுக பயணிப்பான் ஆளுகின்ற அழுத்தக்காரன் வீழ்ந்திடுவான் உழைப்பாலே சோம்பலென்று கிடந்தாலோ தூரம்...

Continue reading

வரமாகும் வாய்ப்புக்களே

இரா.விஜயகௌரி வரமாகும் வாய்ப்புக்கள் அவை தடமாகும் செயல் தழுவின் உரமாய் நாம் பயன்கொள்ளின் உரைத்தெழுதும் நம் தடங்கள் வாய்த்ததெல்லாம்...

Continue reading

செல்வநாயகி தெய்வேந்திரமூர்த்தி

வணக்கம் அண்ணா
சந்தம் சிந்தும் சந்திப்பு
தலைப்பு:-

தலையீடு !
“”””””””””

நிலையில் உலகில் நிகழ்த்தும் செயல்கள்
மலையாய் எழுந்து மனிதம் மறைத்தால்
சிலையாய் அமர்ந்து சிரிப்பார் எனினும்
தலையிட் டுறுத்தும் தவிப்பு!

இனத்தை அழித்தும் இடர்கள் விளைத்தும்
கனத்தை மிகுத்திக் கருத்தைக் குலைத்துச்
சினத்தில் உழன்றிடும் செய்கையர் தங்கள்
மனத்துள் உறுத்தும் மருந்து!

தலைமை உவந்து தவிப்பவர் சாபம்
வலையாய் வளைக்கும் வருத்தி உறுத்தும்
விலையில் உயிர்க்குள் விளைக்கும் பயமாய்
அலைபோல் அலையும் அகம்!

எழுவாய் உடனே எதிரில் வந்தே
மழுவெனப் புத்தி மருட்டா நிலையில்
பழுவாய் உணர்த்திப் பகர்ந்திடச் சாட்சி
புழுவாய்த் துடிப்பார் புரண்டு!

அகத்ததன் சாட்சி அதுவாய்த் தோன்றும்
இகத்தின் இருப்பை இயல்பை வளர்க்கும்
நிகழும் செயலுள் நிமிர்வை வழங்கும்
தகவினர் தமக்குள் தழைத்து!

திருமதி
செ.தெய்வேந்திரமூர்த்தி.
பரந்தன்.
இலங்கை.
12 / 08 / 2023.

Nada Mohan
Author: Nada Mohan