ஆளுகின்றான் அடிபணிகின்றோம்..!!

வியாழன்கவி 2300!!

ஆளுகின்றான் அடிபணிகிறோம்!!

வாழுகின்ற வாழ்க்கையிலே
வழி நெடுக பயணிப்பான்
ஆளுகின்ற அழுத்தக்காரன்
வீழ்ந்திடுவான் உழைப்பாலே
சோம்பலென்று கிடந்தாலோ
தூரம் விட்டே சென்றிடுவான்
துணிந்து நிற்கும் மனங்களில்
விரல் பற்றி சேர்ந்திடுவான்..

வங்கிகளில் குடியிருப்பான்
இங்கிதமும் தெரிந்திடுவான்
உயர்த்தி வைத்து அழகெனவும்
உணர்த்தி விட்டு புகழெனவும்
உரைத்துவிட்டு அறமெனவும்
அகராதி சொல்லிடுவான்
அகந்தைக் காரன் மட்டுமல்ல
அன்பெழுதும் இரக்கக் காரன்…
சிவதர்சனி இரா
5/3/2026

Author:

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading