வரமானதோ வயோதிபம்
வரமானதோ வயோதிபம் 53
ஜெயம் தங்கராஜா
கவி 630
எல்லாம் அவன் செயல்
இதுவும் கடந்து போகும் என்பார்
வலியும் வேதனையும் அனுபவிப்பவனுக்கே தெரியும்
எதுவும் மனதை மீறியொன்றும் நிகழ்ந்துவிடாது
பட்டுத்தெளிந்தவர்கள் பாடுபடுவோர்க்கு சொல்லும் சேதி
அதுவாகத்தான் அடிமேலடி வாழ்க்கைக்கு கிடைக்கின்றது
போராடிக்கொண்டே பல நாட்களும் முடிகின்றன
பொதுவாக சொல்லிவிட்டு யாரும் போகலாம்
விதிவிலக்கு விதிக்கு இல்லையென அவரறிவாரோ
கூட்டிற்குளுள்ள காற்று கரையும் வரை
விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக்கொண்டு பயணம்
ஆட்டிவைக்கின்றார் ஒருவர் எங்கோ இருந்து
கொண்ட வேடங்களுக்கு இயக்குனரும் அவரே
பாட்டிலே தத்துவத்தை பாடிவைத்துத்தான் என்ன
அதைப்புரிந்து திருந்திக்கொண்டவர்தான் யாரோ
ஏட்டிலே இல்லாத மெய்யியல் கோட்பாடா
அதன்படி நடந்திட ஊழ்தான் விட்டுவிடுமா
துன்பத்தை வேண்டுவோர் வையகத்தில் இல்லை
வலாற்கார வாழ்க்கை பழகுவரும் தானாக
அன்றாடம் பூர்த்தி அடையாத தேவைகள்
வலிகளின் வழிகளை காலம் அமைத்துவிடும்
புன்னகையின் தேசத்திலே வாழவே விருப்பம்
நெருங்கும்போது இன்பம் நிகழுமந்த திருப்பம்
இன்றிருக்கும் நிலைமை வாசல் தாண்டிப்போகும்
என்றவொரு நம்பிக்கையில் ஒவ்வொருநாளும் பிறக்கும்
ஜெயம்
17-11-2022
