கவிதையெனக் கிறுக்கினேன்(52)…
புனித ரமலானே
ஜெயம் தங்கராஜா
kavi 641
மொழியின்றி வாழ்வில்லை
ஜெகமெங்கினும் தாய்மொழி நாள் கொண்டாட்டம்
அகத்தியன் கண்ட மொழியிங்கு அமுதாட்டம்
அகரத்தில் தொடங்கி முடிகின்றவரையில் சுகமூட்டும்
சிகரத்தையடைய கூடவே இருந்து வழிகாட்டும்
சொற்களின் சாலம் மயங்கவே வைக்கும்
கற்கண்டாய் இனிக்கும் கேட்டாலே காதோரம்
பற்பல மொழிகளும் அகிலத்தில் இருக்கலாம்
நற்றமிழ் போல இனிமையைத் தருமோ
பெற்றோர்கள் காட்டி வரவான மொழி
கற்றிடக் கற்றிட தரமாக்கும் மொழி
வற்றாது வழங்கும் கொடையான ஜீவநதி
இற்றைவரைக்கும் கொண்ட வாழ்க்கையின் விதி
எங்கு சென்றாலும் நிழலாகத் தொடருமே
அங்கும் என் சுவாசத்தை நிரப்புமே
மங்காத ஞானத்தை ஆயுளுக்கும் கொடுக்குமே
பங்கெடுத்து வாழ்க்கையில் என்றுமெனை ஆளுமே
பெயர்தந்து பெருமைதந்த அருமையினை மறப்பேனா
அயல்மொழியை உயிர்மொழிக்குள் நுழையவுந்தான் விடுவேனா
உயர்வானதே நம்மொழி சூரியனாய் உதிக்கும்
தயக்கமில்லை தலைமுறைகள் சிந்தைதனில் பாதிக்கும்
அழகான தாய்மொழியை பெற்றதனால் மகிழ்ச்சியே
பழகிவிட பழகிவிட புத்தியிலும் வளர்ச்சியே
அளப்பெரிய பாக்கியமே தமிழினத்தில் பிறந்தது
உளம்நிறைந்த வாழ்க்கைக்கு செம்மொழியே சிறந்தது
இதுவரைக்கும் வழிநடத்தி சென்றாயம்மா நன்றி
அதுவரைக்கும் பாடிடுவேன் என்றுமுனை போற்றி
முதுமையிலும் முதுமொழியே பசியதனை தீர்க்கும்
புதுமைகளின் நாயகியே பூவுலகில் வாழிநீவாழி
ஜெயம்
22-03-2023
