திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

வணக்கம் master 🙏வணக்கம் அதிபர் 🙏

சந்தம் சிந்தும் சந்திப்பு – 205

தலைப்பு – தைமகளே மங்கலம் தருவாயே

வரப்புயரவென்று தரமுயர்த்த வழியுரைத்தார் ஔவை
வரப்புக்குள் பயிர் வளர ஊரூராய்
உரத்திற்கு அலையும் இன்றைய விவசாயி
சிறப்புடைய தைமகளே சிறந்தவழி காட்டிடுவாய்.

மண்ணில் வாழ்வோர் மனவமைதி பெற்றிட
விண்ணளவிற்கு விரிந்த விலையேற்றத்தை வீழ்த்தி
கண்ணீரில் வாடுவோரின் கவலைகளை கரைந்திட
நன்மைதரு சூழலை தைமகளே தந்திடுவாய்.

நெருக்குதல் நிறைந்த நாகவிருள் அகன்றிட
உருக்கமுடன் வேண்டுகிறோம் உரியவழி காட்டிடுவாய்
மருவிடும் தைமகளே மங்கலம் மிளிர
தருவாயே நல்லமைதியொடு துயரற்ற வாழ்வை.

நன்றி வணக்கம்🙏

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
(10/01/2023)

Nada Mohan
Author: Nada Mohan