புனித ரமலானே

புனித ரமலானே வஜிதா முஹம்மட் மறையை வழங்கிய மாதம்நீ மனிதம் சிறக்கும் ஈகையின் மாதம்நீ அ௫ளைப் பொழியும் மாதம்நீ அகிலமாழும் இறை...

Continue reading

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

வணக்கம் master 🙏 வணக்கம் அதிபர் 🙏

சந்தம் சிந்தும் சந்திப்பு — 178

தலைப்பு — பாமுகம்

ஆவின் பால் அமைந்திடும் சத்துணவாய்
பாவின் சக்தியும் பலரையும் கவர்ந்திடும்
கூவும் குயிலின் குரல் இனிமைபோல்
பூவின் நறுமணமும் பொலிவும் இனித்திடும்.

இறுமாப்பால் இடருற்ற இராவணன் இசையால்
பொறுமையுடன் இறைவன் பேரருள் பெற்றான்
மறுப்பில்லை மன்னரும் மக்களும் இன்னிசையை
விருப்புடன் வளர்த்ததை வரலாறும் கூறும்.

நலமே நகர்ந்தாய் நாட்டினாய் பாமுகமே
பளபளக்கும் வெள்ளிவிழா பந்தலுக்குள் உன்கொடியை
வளர்த்திடுவாய் வளமோடு வளரும் பொன்விழாவை
உலகறியச் செய்திடுவாய் உழைப்பை உயர்த்திடுவாய்.

நன்றி வணக்கம் 🙏

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
13/06/2022

Nada Mohan
Author: Nada Mohan