திரேஸ் மரியதாஸ்

உருமாறும் புதிய கோலங்கள்
உயிர்வாழும்வரை உருமாறிய
கோரங்களாயே கோலங்கள்
விரிகின்றது விந்தையாய்
சிந்தையை மந்தையாக்கி

கோவித்தாய் உற்பவித்தநீ
கோபங்கொண்டா மாறினாய்
டெல்ராவாய்
வாயைமூடு கையைக்கழுவுவென
கடூரமாயிருந்தும் கடுகளவேனும்
கனியவில்லை மனிதமனம்
புனிதமாக

வந்தேன் ஒமிக்ரோனாய்
தள்ளியே நிற்கிறாய் நீ
தர்மத்தைக் காக்காது
தனக்கெனவா வாழப்போகிறாய்
தரணியிலெனவா மீண்டுமோர்
பீரூவாய்

கணக்கு
விஞ்ஞானமெல்லாங் கலந்து
அஞ்ஞாதவாசமாக்கி ஆட்டுகிறாயே
பதின்னான்கு பத்து ஐந்துவென
அறைக்குள் பூட்டி சிறையாய்

கறைகள் எல்லாங்கழுவித் துறவாய்
வாழ்வைத் திறந்து உருவை மாற்றவா
உருமாற்றவைக்கிறாய் புதிய கோலமதை
பூமியில் வரைந்திடப் புதிய புள்ளிபோட்டு

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

    Continue reading