கணப்பொழுதில்

கணப்பொழுதில்.. சிவருபன் சர்வேஸ்வரி கணப்பொழுதில் மாறும் மனிதன் கோடி இமைக்கும் நேரத்துக்குள் இரணியர் பலகோடி முடிக்கும் காரியம் தெரியாதவர்...

Continue reading

“திரைப்படம்”—எல்லாளன்

சென்னைக்கு விடுமுறையில் சென்ற வேளை
திரைப்படங்கள் எட்டை நாம்
பார்த்தோம் ஜோராய்
முன்னாக அகல திரை நீள
ஹோல் போல்
முழு நீள மண்டபமாய். திரை அரங்கம்
ஒன்பதெண்ணில் கூடங்கள்
தொடராய் மாடி
ஒரே வேளை வேறு வேறு படங்கள் ஓடி
என்ன இது என மலைப்பை எழுப்பிம் கோலம்
எழிலார்ந்த இதனை “விஜய மால்” என்பார்கள்.

“விறுமன் படம் வெளிவந்த அன்றே பார்த்தோம்.
வெகுவாக கவர்ந்த படம்
சீத்தா ராமன்
சரவணா ஸ்ரோஸ் முதலாளி தயாரிப்போடு
தான் நிடித்த லெஜன் படமும்
பார்க்க ஓக்கே
“ஒரே இரவில்”,”குலுகுலு” “டென்”
“மாயா”
உன்னத நல் “காடன்”படம்
திருப்தி தந்து
இதமான குரூட்டி வசதி யோடு
இரு நூறு கட்டணம் படம் ஒன்றுக்கு.

கதை ஒன்றில் நாயகனாய் நடிப்போருக்கு
கணக்கற்ற ரசிகர் குழாம் விசில் அடிக்க
நிஜமான நாயகனாய் அவரை ஏந்தி
நிற்கிறது ரசிகர் குழாம் லட்சமாக
எதில் எந்த கட்டிடங்கள் கடை உடைகள்
எல்லாமே நடிகரது படத்தைத்தாங்கி
தலைவிதியோ தமிழ் கட்சி தலைவன் ஆக
தகுதி திரை நாயகர் தான் நிலை என்றாச்சு.

Nada Mohan
Author: Nada Mohan