வரமானதோ வயோதிபம் 53
” வரமானதோ வயோதிபம் “
நகுலவதி தில்லத்தேவன்
வியாழன் கவி 31.3.22
பாரெல்லாம் பதை பதைக்குது.
பசுமை நிறைந்த பார் இப்போ
புரட்சி நிறைந்த போர்
பழைய புதிய கட்டிடம்
ஒரு நொடியில்
தவிடுபொடியானதே
நாடு சுடுகாடானதே .
கதறிடும் மக்களின் கூட்டம்
துப்பாக்கியின் ஓசையும்
வானைப் பிளக்குது
செத்து மடியும் உயிர்கள்
அனாதைகள் வீதி எங்கும்
ஓலம்.
நாடு நாடாய் அவலம்
பாடாய் படுத்து துன்பம்
எரிபொருள் விலை உயரது
விலைவாசியும் ஏறுமுகம்
நாடுகள் கூடி பேசியே
முடிவுகள் தேடி ஓடுது
விடிவும்
காணவில்லை.
பசுமையும் இறங்கு முகம்
பாரில் தண்ணீர் பஞ்சம்
தோட்டமும் துறவும் ஓட்டம்
அவனிக்கு வருமே பஞ்சம்.
அதிபருக்கும் வாணி க்கும்
விஐயகௌரிக்கும், தொடரும்
கவி ஆய்வு தட்டிக் கொடுப்புக்கும்
நன்றி
