புனித ரமலானே

புனித ரமலானே வஜிதா முஹம்மட் மறையை வழங்கிய மாதம்நீ மனிதம் சிறக்கும் ஈகையின் மாதம்நீ அ௫ளைப் பொழியும் மாதம்நீ அகிலமாழும் இறை...

Continue reading

நகுலவதி தில்லைதேவன்

3.1.22. வியாழன் கவி 176

பூக்கட்டும் புன்னகை

மலர்களே மலருங்கள்
மணம் பரப்பி மலருங்கள்

காலையில் பறவைகள் ஒலியும்
கதிரவன் ஒளியும்
தென்றலின் சுகந்தமும்
மரங்களின் அழகும்
மலர்களின் வண்ணமும்
மனத்துக்கு மகிழ்ச்சிமே
ஆயிரம் மலர்களே மலருங்கள்.

மழலையின் சிரிப்பினில்
மொக்கை வாயை திறந்து சிரிக்கும் பாட்டியின் சிரிப்பும்
பூக்கும் ஆனந்த புன்னகை

சிரிப்பினில் பலவிதம்
ஆணவம் சிரிப்பு
நரிச் சிரிப்பு கள்ளச் சிரிப்பு
கபடச் சிரிப்பு. இவை.

உள்ளன்போடு சிரிப்பதே
பூக்கின்றன மலர்கின்ற
புன்னகை.
“. உள்ளக் கமலம் அடி உத்தமனார்
வேண்டுவது”
உள்ளம் மகிழ்ந்து பூக்கட்டும்
புன்னகை
பூத்தால் நோய் துன்பங்களும்
ஓடிவிடும்
பொன்னகைக்கு முன் புன்னகையே பெருமதிப்பு

மனித யின் இயற்கை கொடை
புன்னகை
அதுதான் அன்புடன் பூக்கும்
புன்னகை.

அதிபர்க்கும். நகலாவுக்கும்
வாணிக்கு ம். தஸ்சினிக்கும்
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan