நகுலா சிவநாதன்

மூண்ட தீ

முப்புறம் பெருக ஓங்கி
தீண்டியதே நூலகத்தை
தீயெனும் நெருப்பு

ஆண்ட அரசு ஆக்கினை கொடுத்தே
அனலில் தீயாய்
எரித்ததே நூல்களை

மீண்டும் சாம்பலில்
மீள உயர்ந்து
நீண்டு நிலைக்க
நித்தமும் காப்போம்

நகுலா சிவநாதன்

Nada Mohan
Author: Nada Mohan