புனித ரமலானே

புனித ரமலானே வஜிதா முஹம்மட் மறையை வழங்கிய மாதம்நீ மனிதம் சிறக்கும் ஈகையின் மாதம்நீ அ௫ளைப் பொழியும் மாதம்நீ அகிலமாழும் இறை...

Continue reading

நகுலா சிவநாதன்

தேடும் விழிகளுக்குள் தேங்கிய வலி

நாடும் நசுக்கும் நம் மக்கள் கூட்டம்
தேடும் விழிகளுக்குள் தேங்கிய வலி
மூடும் கதவுகளும் முனைப்பாய் இறுக்க
ஆடும் ஆட்டங்களும் அரசியல் சதுரங்கமே!

தேங்கிய வலிகள் தேசத்தை நோக்க
தாங்கும் விழிகள் வரவை எதிர்பார்க்க
துாங்கா இரவுகள் துரத்தும் வேளை
நீங்கா வாழ்வாய் நித்தம் போராட்டம்

தேடும் விழிகளில் தேனாய் ஆறு
கூடும் கூட்டங்களும் அவன் வருவானா?
பாடும் குருவிகளும் அவளைக் கண்டாயா?
பறக்கும் மனமோ இயந்திர வேகமாய்!
அவன் வருவானா??

நகுலா சிவநாதன்1688

Nada Mohan
Author: Nada Mohan