புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

நகுலா சிவநாதன்

என்று தீருமோ?

வென்று நாமும் வாழ்வதற்கு
வெற்றிக்கொடி நடுவதற்கு
சென்ற எம் சிட்டுகள்
திரும்பி வருவாரோ?

தேடும் உறவுகளின் அவலம்
தேசவழிகளில் கண்கள்
கூடும் நம்உறவுகள் கண்ணீர்
எப்போ தீரும்

பேரிடரின் அவலத்தில்
ஊரிடமே உணர்வாகக் கேட்கிறோம்
விழி வைத்து பார்க்கிறோம்
விடை தருவார் யாரோ

கொடிய பசி எமை வாட்ட
கொலுவிருக்கும் என்பிள்ளை
எப்போ வருவான்? ஏக்கங்கள் சூழ
விடை தெரியா பாதையாக
விசும்பும் மக்கள்

நகுலா சிவநாதன்

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading