கவிதையே தெரியுமா

கவிதையே தெரியுமா காதலின்பம் கவிதையே கனியும் காலமே உனதாக்கி காசினியில் மலர்ந்தாயே கற்பகமே அற்புதமே கலையாத பொக்கிசமே நிற்பதம்...

Continue reading

பாமுகம் அகவை 27 வாழ்த்து

கவிக்கோ பரம விஸ்வலிங்கம்

வீசும்காற்றுக்கு பிறந்தநாள்
விடுகின்ற மூச்சுக்கு பிறந்தநாள்
பேசும் தமிழுக்கு பிறந்தநாள் – அந்த
பெருமையை உலகம் அறிந்தநாள்.

லண்டன் தமிழ் வானொலிக்கு பிறந்தநாள்
பாமுகமாக மலர்ந்தநாள்
அகவை ஈர்பத்து ஏழாச்சு
ஆலவிருட்சம் தோப்பாச்சு.

பாமுகப் பிரம்மம் பலரது பிம்பம்
ஊர்வலம் வருவதைப் பாருங்கள்
இளையவர் நாட்டிய நாற்றுக்கள் – இது
எண்ணக் குவியலின் ஊற்றுக்கண்
எழுந்தோம் என்றே வாழ்த்துங்கள் – எல்லோரும்
எழுந்து நின்று வாழ்த்துங்கள்!

Nada Mohan
Author: Nada Mohan