10
Apr
ராணி சம்பந்தர்
தூசுடன் போர் புரிந்த போட்டியில்
நாசு அடைத்து மூசுகின்ற மூக்கும்
பேசும் மொழி,...
10
Apr
புத்தாண்டே வா -56
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-04-2025
புத்தாண்டே வா
புதுமை பொலிவுடனே
புலத்தில் நிம்மதியும்
பூகோளத்தில் அமைதியும்
சோகங்கள் விட்டு
சொந்தங்கள் சேர்ந்து
சொல்பேச்சு கேட்டு
சொர்க்க...
10
Apr
இன்னமும் மாறவில்லை
நகுலா சிவநாதன்
இன்னமும் மாறவில்லை
காலநிலை இன்னமும் மாறவில்லை
கடும் குளிரும் குறையவில்லை
பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும்
கூட்டுது...
பாலதேவகஜன்
நேரம்
காலநேரம் பார்த்தியம்ப
பக்கத்தில் நீ இல்லை அம்மா!
குறுகிய காலத்தோடு
குன்றிப்போன உன் ஆயுளுக்காய்
இன்றுவரை அழுதபடி
இன்பமில்லாதவனாய் இருக்கின்றேன்.
ஏன் இந்த நிலை எனக்கு
உன் கருவில் நான்
தரித்திட்ட நேரம் தவறா?
இல்லை நான் பிறந்திட்ட
நேரம் தவறா?
என் சரியில்லா நேரம்தான்
உந்தன் உயிரை பிரிய வைத்ததுவோ?
நேர்த்தியோடு எனை வளர்த தாயே!
பூர்த்தியான வாழ்வுக்குள்
நான் நுழையும் தறுவாய்
நீ! தவறிப்போனதினால்
என் வாழ்வு பூச்சியமானது.
ஒருத்தி உனை பிரிந்ததினால்
வருத்தி போட்டது வாழ்வு
கால ஓட்டத்திலும் கலையாத
உன் பிரிவின் வலி
என் காலம் உள்ளவரை
என்னை கலங்க வைத்திடுமே
எனக்கான நேரம்
எப்போதுதான் பிறக்குமோ!
அப்போது ஆனந்தம்
என்னில் நிலைக்குமோ!
தப்பாத உன் நினைப்பு
அந்த ஆனந்தத்தை
தள்ளித்தான் வைக்குமோ!

Author: Nada Mohan
15
Apr
வஜிதா முஹம்மட்
சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி
புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின்
மன்னிப்பு நோன்பின்நேரம்
இறைகட்டளையை நினைவூட்டி
மனித...
15
Apr
ஜெயம்
பிறந்தது தமிழ் சித்திரை புத்தாண்டு
சிறப்பான பலன்தரும் கோலத்தைப் பூண்டு
விடியும் நாளெல்லாம்...
14
Apr
ராணி சம்பந்தர்
புது வருடம் பூத்தது சித்திரை 14
மெதுவாக வருடிய ஒளிக்கற்றை
முத்திரை பதித்தது சந்தோஷக்
கூத்தில்...