வரமானதோ வயோதிபம் 53
” வரமானதோ வயோதிபம் “
பாலதேவகஜன்
வேள்வி
அஞ்சி அஞ்சி வாழ்ந்திடவா
ஆண்டவா! எமைப் படைத்தாய்
ஆதிக்குடி நாங்களென்ற
அடையாளம் ஏன் அழித்தாய்.
வலிந்து வலிந்து இழுக்கின்றான்
நலிந்தவர்கள் நாமென்று
அடங்கி இனியும் வாழ்வதா?
அச்சம் தவிர்த்து எழுவதா?
என்ற எங்கள் கேள்விக்கு
விடையாய் எழுந்தான்
விடுதலை புலியாய் மலர்ந்தான்
விடுதலை வேள்விக்கு தயாரானான்.
எங்கள் அண்ணன்
எதிலும் விண்ணன்
எதிரிகள் குலைநடுங்க
எழுந்தான் மன்னன்.
விடுதலை வேள்வித் தீ!
விசாலமாய் எரிய ஆகுதியாய் தங்கள்
உயிர்களையே தரத்துணிந்தார்கள் ஆயிரமாயிரம் விடுதலை வீரர்கள்.
அண்ணன் காட்டிய வழியில்
அணிவகுத்தே நின்றோம்
அன்னை மண்ணை காத்திட
அரணாய் நிமிர்ந்தோம்.
நிமிர்ந்தோம் நிமிர்ந்தோம்
அடிமை விலங்குடைத்து
எம் தமிழீழ மக்களை
தலை நிமிர்வோடு வாழ வைத்தோம்.
வலிந்தவன் நலிந்தான்
எங்கள் வீரியம் கண்டு.
வல்லரசுகளை துணைக்கு அழைத்தான்
எங்களை வீழ்த்திட என்று.
சதிவலைகள் எங்கள் நிலைகளை
நிலை குலையவே செய்தது
விதிவலை ஆயிருந்தால்
ஒருவேளை வென்றிருப்போம்
எமை சூழ்ந்தது எவராலுமே
வென்றிட முடியா உலக சதிவலை.
எம் விடுதலை வேள்வி
முள்ளிவாய்க்காலோடு அணைக்கப்பட்டதாய்
எதிரிகள் கூறினாலும்
விடுதலை வேள்விக்கான
ஆகுதிகள் உலகமெங்கும்
பரவி மொளனமாய் கிடக்கின்றன
என்பதை உணராத எதிரியின்
ஆட்டம் அடங்கும் காலம்
அடைவோம் ஈழம்!
