புது வருடம்

செல்வி நித்தியானநதன்
புது வருடம்
அறுபது ஆண்டின்
பிறப்பு
அவனியில் வந்திடும்
சிறப்பு
அதிகமாய் சேர்ந்திடும்
பொறுப்பு
அதிகாலை வரும்வரை
இருப்பு

ஆலயத்தில் மருத்து
நீரும்
அம்மாவின் தலை
முழுக்கும்
அட்டிலில் இனிப்பு
பொங்களும்
ஆனந்தமாய் ஆடை
உடுத்தும்

கைவிசேட பணத்தை
எதிர்பார்த்தும்
உறவுகளின் இல்லம்
செல்வதும்
உற்சாகம் தந்ததே
அன்று
எல்லாமே தொலைத்து
தனிமையே இன்று

செல்வி நித்தியானநதன்

Nada Mohan
Author: Nada Mohan